Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் முகைதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகைதீன் களக்காட்டிலிருந்து கோவைகுளத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நான்கு வழி சாலையில் முகைதீன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முகைதீன் மூன்றடைப்பு சாலையை கடக்க முயன்றபோது நெல்லை நோக்கி சென்ற கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் முகைதீன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் முகைதீனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முகைதீன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |