Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வாகனங்கள் மோதல்…. இரண்டாக உடைந்த மின்கம்பம்…. கரூரில் பரபரப்பு….!!

சரக்கு ஆட்டோ மோதி மின்கம்பம் இரண்டாக உடைந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்திற்கு திருவானைக்காவலிருந்து டயர்களை ஏற்றி கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இந்த ஆட்டோவை விஸ்வநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் அருகாமையில் வந்த போது எதிரில் வந்த வாகனத்தின் மீது ஆட்டோ மோதியுள்ளது.

இதனால் செயல்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் விஸ்வநாதன் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விபத்தினால் மின்கம்பம் இரண்டாக உடைந்த காரணத்தினால் மின் இணைப்பை உடனடியாக துண்டித்தால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |