ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் மாணவியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ ஹைதராபாத் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் பழுது ஏற்பட்டு விட்டதாக மாணவியிடம் டிரைவர் கூறியுள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் மாணவியை ஏற்றி அனுப்பி வைத்தார். பின்னர் அந்த வேனை ஆட்டோ டிரைவர் பின்தொடர்ந்தார்.
அப்போது வேனை ஓட்டிச் சென்றவர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று, பின்னர் அந்த மாணவியை அடித்து ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேர் காட்டுப்பகுதியில் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த மாணவியின் ஆடைகள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு தப்பிச் சென்றனர். அந்த வழியாக சென்ற இளம்பெண் ஒருவர் மாணவிக்கு ஆடை வழங்கி போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மாணவியை பலாத்காரம் செய்த 4 பேரும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் என்பது தெரியவந்தது. ஆட்டோவில் ஏற்றிச் சென்ற முதல் குற்றவாளி ராஜு மற்றும் அவரது நண்பர்கள் சிவா, பாஸ்கரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.