Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஸ்டாண்டில் நிறுத்திய ஆட்டோ…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருடுபோன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜாமணி. ஆட்டோ ஓட்டுநரான இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிலுக்குவார்பட்டியில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி உள்ளார். பின்பு அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது தன் ஆட்டோ காணாமல் போயிருப்பதை கண்டறிந்தார்.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவருடைய ஆட்டோ கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுவதை மட்டுமே தனது  வாழ்வாதாரமாக நம்பி இருந்த அவர் உடனே நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை அதிகாரி சங்கரேஸ்வரன் ஆட்டோ காணாமல் போனது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Categories

Tech |