4 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தில் அர்வாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு டி.எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது 4 மர்ம நபர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து அர்வாசிடம் தகராறு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது கோபம் அடைந்த மர்ம நபர்கள் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆட்டோவில் இருந்த 4 மாணவிகளும் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதைக் கண்ட 4 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்தவர்கள் வினோத், வெங்கடேசன், மோகன்ராஜ் மற்றும் பாஸ்கரன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்தற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.