இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் வேல் ,பூஜை ,ஆறு ,சாமி, வேங்கை, சிங்கம் போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அம்மு அபிராமி, பிரகாஷ்ராஜ், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் .
Kick started the first scheduled for #AV33 with director #Hari sir in #Pazhani today..🤞❤
Walked into a local gym after shoot and worked out with these boys to give them a bit of motivation…💪
Love you all..😘 #gymlife #workoutmotivation #circuittraining pic.twitter.com/YJgeIZZkoM— ArunVijay (@arunvijayno1) March 16, 2021
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பழனியில் தொடங்கியுள்ளதாக நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அருண் விஜய் அக்னிசிறகுகள் ,சினம், பாக்ஸர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.