அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி, ஒமிக்ரான் தொற்றுக்கு என்று தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் கொரோனா தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது. இதில், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக உள்ள ஆண்டனி பவுசி பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் தொற்றை எதிர்த்து செயல்படும்.
எனவே, ஒமிக்ரான் தொற்றுக்கென்று தனியாக தடுப்பூசி கண்டறிய தேவையில்லை என்று கூறி இருக்கிறார். மேலும், பைசர் தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்தி கொண்டால், ஒமிக்ரானை எதிர்த்து அது முழுமையாக செயல்படாவிட்டாலும், அதிக நோய் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய கடும் பாதிப்பிலிருந்து இரண்டு தவணை தடுப்பூசிகள் 70% பாதுகாப்பை அளிக்கின்றன என்று கூறியுள்ளார்.