நேபாளத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் உட்பட 11 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் உள்ள முஸ்தாங் என்ற பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பனிப்பாறைகள் 30 நிமிடங்களுக்கு உருண்டிருக்கிறது. இதனால் அங்கு வசித்த மக்கள் பதறியடித்துக்கொண்டு மலையடிவாரத்தை நோக்கி ஓடியுள்ளனர்.
மேலும், அங்குள்ள பள்ளி ஒன்றில், தப்பிச் செல்ல முடியாமல் சில மாணவர்கள் காயமடைந்தனர். இது மட்டுமல்லாமல், மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. பனிப்பாறைகள் சரிவது அடிக்கடி நிகழ்வதால் மக்கள் பத்திரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.