சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரத்குமாருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரத்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சரத்குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து உள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.