மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கடந்த மே மாதம் 21ஆம் தேதி அங்கு முழு ஊரடங்கு மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (21ஆம் தேதி )முதல் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தற்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்று இலங்கை மருத்துவ நிபுணர் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அவர்களது எச்சரிக்கையும் மீறி அந்நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது.