மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . அதன்படி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குன்னவாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து 5 இருசக்கர வாகனங்களில் 3 பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.
ஆனால் அந்த 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் ஒழுக்கு வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் ,பெருமாள் மற்றும் அஜித் என்பது தெரியவந்தது .இதைதொடர்ந்தது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.