Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவங்கள மட்டும் அனுமதிக்கிறாங்க” கலெக்டரிம் தி.மு.க.வினர் புகார்…. சென்னையில் பரபரப்பு….!!

வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த கலெக்டரின் காரை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரம் தனியார் பள்ளியில் பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதற்கு அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு வேட்பாளரின் முகவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பள்ளி அருகில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சின்னையா வீடு இருக்கிறது .

அந்த வீட்டின் முன்பு மாவட்ட செயலாளர்களான சிட்லபாக்கம் ராஜேந்திரன், கே.பி. கந்தன், முன்னாள் அமைச்சர் சின்னையா, பா.ஜ.க. பார்வையாளரான செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், அ.தி.மு.க. நிர்வாகிகளான பெரும்பாக்கம் ராஜசேகர், கோவிலம்பாக்கம் மணிமாறன் உட்பட 500-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சியினர் திரண்டு இருந்தனர். இதனை அறிந்த தி.மு.க.வினர் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் செல்ல தொடங்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

அதற்கு தி.மு.க.வினர் எங்களையும் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அ.தி.மு.க.வினர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் எனக் கோரி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்ய வந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்தின் காரை தி.மு.க.வினர் வழிமறித்து முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அ.தி.மு.க.வினரை மற்றும் போலீசார் உள்ளே அனுமதித்து இருப்பதாக கலெக்டரிடம் தி.மு.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பின் போலீசார் தி.மு.க.வினர் அனைவரையும் அப்புறப்படுத்தி கலெக்டரின் காரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து சின்னையா வீட்டின் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முக்கிய நிர்வாகிகள் தவிர மற்ற அனைவரையும் வெளியேற்றினர்.

Categories

Tech |