Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல விழுந்துட்டு… வாலிபர்களின் கவலைக்கிடமான நிலைமை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வெடி விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை என்ற பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு வெளி மாவட்டத்தில் வசிக்கும் சிலர் அந்த குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். அந்த குவாரியில் பெரிய பாறைக் கற்களை உடைப்பதற்கு  வெடிவைத்து தகர்த்தி வந்துள்ளனர். அவ்வாறு வெடிவைத்து தகர்க்கும் பாறைகளை அந்த குவாரியில் வேலை செய்யும் பணியாளர்கள் சிறிய கற்களாக உடைப்பார்கள். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த குப்புசாமி மற்றும் தமிழ் என்பவர்கள் இணைந்து குவாரியில் கற்களை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய பாறை கற்களுக்கு வைத்திருந்த வெடி திடீரென்று வெடித்தில் அதிலிருந்த பாறைக் கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறியது.

இந்த விபத்தில் சிக்கிய குப்புசாமி மற்றும் தமிழ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் குவாரியை சோதனை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த குவாரியில் வெடிவிபத்து எப்படி ஏற்பட்டது என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |