Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவங்களால தான் இப்படி ஆகுது… அடிக்கடி நடைபெறும் விபத்துகள்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டீக்கடைக்காரர் மீது டிப்பர் லாரி மோதியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் போக்குவரத்து சாலையின் ஓரத்தில் சொந்தமாக டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கணேசன் டீக்கடையில் இருந்தபோது அவ்வழியாக ஒரு இளம் பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். இதனையடுத்து அந்த இளம்பெண் சென்ற இரு சக்கரவாகனம் கணேசனின் டீக்கடைக்கு அருகே சென்ற போது திடீரென பழுதாகி நின்று விட்டது.இதனால் அந்த இளம் பெண் கணேசனிடம் தனது வண்டியை பழுது பார்த்து தரும்படி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கணேசன் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரி கணேசனின் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், இவ்வாறு இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றது என்று கூறி  திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பிறகு காவல் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதில் பொதுமக்கள்  அப்பகுதியில் அமைந்துள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரிகள் அதிகவேகமாக வருவதும் செல்வதுமாக இருக்கின்றதால் அடிக்கடி இதுபோன்று விபத்துகள் ஏற்படுகிறது  என்று தெரிவித்துயுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு தான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்று உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |