Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்களாவே வந்து சிக்கிட்டாங்க… சமூக வலைதளத்தில் பதிவிட்ட செய்தி…வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சமூக வலைத்தளங்களில் மான் கொம்பு விற்பனை என விளம்பரம் செய்த இரண்டு வாலிபரை வன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள செண்பக்கால் பகுதியில் முகமது அப்துல் ரியாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருக்கிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது என்ற சலீம் என்பவரும் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களான இருவரும் அப்பகுதியிலுள்ள கண்மாய்க்கு நடைப்பயிற்சிக்கு சென்றபோது அங்கு மான் கொம்புகள் கிடந்ததை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டனர்.

இந்நிலையில் முகமது அப்துல் ரியாஸ் மற்றும் சலீம் இணைந்து மான் கொம்புகள் விற்பனைக்கு உள்ளது என சமூக வலைத்தளங்களில் செய்தி பதிவிட்டுள்ளனர். இந்த செய்தியை கண்ட வனத்துறையினர் முகமது அப்துல் ரியாஸ் மற்றும் சலீமை தொடர்புகொண்டு நாங்கள் இந்த மான் கொம்புகளை வாங்கிக் கொள்கிறோம் என்று கூறி ஒரு இடத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சலீம் மற்றும் முகமது அப்துல் ரியாஸ் ஆகிய இருவரும் மான்கொம்பு எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்று போது அங்கிருந்த வனத்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து மான் கொம்புகளை கைப்பற்றினர். அதன் பிறகு மாவட்ட வன அலுவலர் கவுதம் என்பவர் அவர்கள் இருவருக்கும் மான் கொம்புகளை திருடிச்சென்று விற்பனை செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |