பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே உள்ள ஒரு பகுதியில் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் பெற்றோர் கூறியிருப்பதாவது “பூவரசன் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று இருப்பதாக” அவர்கள் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பூவரசனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கடத்தப்பட்ட மாணவியை காவல்துறையினர் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பூவரசன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.