போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் Newport பகுதில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் இருக்கும் ஒரு தோட்டத்தில் கடந்த 9-ம் தேதி 41 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவர் ஒருவரை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார் . இந்த வீடியோவை எடுத்துக்கொண்டே அந்த பெண் அவரை விட்டுவிடுங்கள் என்னுடைய குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று போலீசாரிடம் கெஞ்சுகிறார். மேலும் நான் உங்கள் மீது புகார் செய்வேன் என்றும் இது ஒரு ஆபத்தான நடத்தை என்றும் அந்த பெண் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான 24 மணி நேரத்திற்குள் பல ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்ததால், அந்த போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது,”அவசரகால ஊழியரை தாக்கிய காரணத்தால் சந்தேகத்தின் பெயரில் அவரை கைது செய்துள்ளோம் “என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த போலீசார் அவரைத் தாக்கியதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து Gwent போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் Tom Harding கூறும்போது, “அந்த 41 வயது மதிக்கத்தக்க வாகனம் ஓட்டுவதற்கான உரிமை நீக்கம் செய்யப்பட்டபோதும் அவர் தொடர்ந்த வாகனத்தை ஓட்டியுள்ளார். அதோடு அந்த வாகனத்திற்கான உரிய காப்பீடும் அவரிடம் இல்லை. மேலும் அவர் அவசரகால ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும், இதனால் சந்தேகத்தின் பெயரில் அவரை கைது செய்ய போலீசார் முற்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும்” அவர் கூறினார்.