Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அவர் பொறுப்பில்லாமல் விளையாடுனாரா’ ….? கிறிஸ் ஜோர்டனுக்கு கெவின் பீட்டர்சன் ஆதரவு….!!!

இங்கிலாந்து அணி வீரர் கிறிஸ் ஜோர்டனுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்  பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .அப்போது இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் வீசிய 17வது ஓவரில் 23 ரன்கள் எடுக்கப்பட்டது .இதனால் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது .இதனிடையே ஜோர்டன் பொறுப்பில்லாமல் பந்து வீசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது .அதோடு அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் வைத்தனர் .

இந்நிலையில் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” ஜோர்டன் பொறுப்பில்லாமல் பந்துவீசியதாக எப்படி கூறுவீர்கள் .அவர் சிறப்பாக  பந்துவீசாமல் இருந்திருக்கலாம் ,ஆனால் அவர் மீது எதிரணியில்  நீஷம் காட்டிய அழுத்தம் தான் இதற்கு காரணம் என்றார். இதையடுத்து  இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்,’ கிரிக்கெட் என்பது கணிக்க இயலாத விளையாட்டு .அதில் தவறுகள் நிகழ்வதை தவிர்க்க முடியாது “என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |