முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் பாலாஜிக்கு ஆதரவு அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி நிலையை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆரிதான் என சில பிரபலங்களும் பிக் பாஸ் ரசிகர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான மீரா மிதுன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘பாலாஜி வெற்றி பெற்றால் தனக்கு சந்தோஷம்’ என கூறியுள்ளார். மேலும் ஆரிக்கு இருப்பது பொய்யான ரசிகர்கள். ஆரியை வேண்டும் என்றே புகழ்ந்து பேசி அவரை கமல் மக்கள் மத்தியில் விளம்பர படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சீசனில் திறமையாக விளையாடுபவர் பாலாஜி மட்டும்தான். அவர் வெற்றி பெற்றால் எனக்கு சந்தோசம் . உண்மையாகவே அவர் அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக விளையாடி உள்ளார் என பாலாஜியை புகழ்ந்து பேசியுள்ளார் மீரா மிதுன் . பிக்பாஸில் தற்போது கொஞ்சம் நல்ல பெயரை பெற்று வரும் பாலாஜி ஆரியிடம் ஆலோசனை கேட்டு வெளியே வந்து விவசாயம் செய்யப் போவதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.