Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களை பார்த்தவுடன்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்பு கோவில் பகுதியில்அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் காவல்துறையினரை வருவதைப் பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |