Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு பழங்கள் இலவசம்… நடைபெற்ற சிறப்பு முகாம்… பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்…!!

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் முகாமானது நடைபெற்றுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி பகுதியில் உள்ள ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை நகர சபை ஆணையாளர் குமார் சிங், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியாளர் சமிரன் தலைமை தாங்கி நடத்தி உள்ளார்.

இதனையடுத்து எம்.பி. தனுஷ் குமார்,  டாக்டர் சதன், எம்.எல்.ஏ. திருமலைக்குமார் ஆகியோர் இணைத்து கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது . இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்களுக்கு பழங்களை இலவசமாக வழங்கி உள்ளனர். மேலும் இந்த சிறப்பு முகாமில் தலைமை ஆசிரியர் ஜோசப் அமுல்ராஜ் ,சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், மேலாளர் சண்முகவேல், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராணி மற்றும் பொதுமக்கள் என பலரும்  பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |