ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதது மிகப்பெரிய இழப்பாக உள்ளதாக, அணியின் இயக்குனரான குமார சங்ககாரா கூறியுள்ளார் .
நேற்றுமுன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான்- பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இதில் ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வலது கையில், அறுவை சிகிச்சை செய்துள்ளதால், ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன், மறுபடியும் கையில் காயம் ஏற்பட்டதால் ,மீண்டும் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது.
இதனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில், அவர் பங்கு பெறவில்லை. இதுபற்றி ராஜஸ்தான் நிர்வாகம் ,ஜோஃப்ராவை அணியுடன் விரைவில் இணைய வேண்டும், என்று நெருக்கடி கொடுக்காதது ,அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது, என்று ராஜஸ்தான் அணியின் இயக்குனரான குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் ஐபிஎல் போட்டிகளில்ஜோஃப்ரா ஆர்ச்சர் , நிச்சயம் கூடிய விரைவில் அணியுடன் இணைவார் ,என்று தெரிவித்துள்ளார். அவரை வைத்துதான் , அணியின் பிளான்கள் நடத்தப்பட உள்ளதாகவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.