அதிபர் ஜோ பைடனின் அழைப்புக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காத்துக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் அதிபராக பதவியேற்ற பின் நாட்டில் கொரோனா தொற்றை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தன்னை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசுவார் என பிரதமர் இம்ரான் கான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் . இதனால் பிரதமர் இம்ரான் கான் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தாலும் ,வெள்ளை மாளிகையில் அதிபருக்கு நேர வேலைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரான பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூதை வரவழைத்து அதிபர் ஜோ பைடன், பிரதமர் இம்ரான் கானுடன் பேச வைக்க தனி கவனம் செலுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் அவரே சலித்துப் போய் ” பிரதமரிடம் அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பேசாமல் இருப்பது வெட்கக்கேடு “என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிபர் ஜோ பைடன் இம்ரான்கானிடம் பேசாதது அந்நாட்டில் ஒரு தேசிய கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா நாட்டின் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார் .
இந்த பயங்கரவாத போரை நான் ஆதரிக்கவில்லை என்று கூறினார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா கண்ட தோல்விகளுக்கு பாகிஸ்தானை குறை கூறலாமா என்றும் , அமெரிக்கா தன் பக்கம் தப்பை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் நாட்டை குறை கூறலாமா ,என்று பிரதமர் இம்ரான் கூறியுள்ளார் . மேலும் அமெரிக்க விமானப்படை தளம் அமைப்பதற்கு பிரதமர் இம்ரான் அனுமதியளிக்காததே இதற்கு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இருந்தாலும் அதிபர் ஜோ பைடன் பிரதமர் இம்ரான்கானிடம் தொலைபேசியில் பேசாமல் இருப்பது அந்நாட்டில் ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.