Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தடையிறங்கிய விமானம்…. நொடியில் நடந்த விபத்து…. பரபரப்பு….!!!

ஜெர்மனியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரான்சில் இருந்து நெதர்லாந்துக்கு விமானி(72) ஒருவர் ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தின் மீது பறந்து கொண்டிருந்தார். இதனிடையில் அவரது விமானத்தின் எஞ்சின் செயலிழக்க தொடங்கியது. இதனால் அவர் விமானத்தை விரைவாக எங்கையாவது தரையிறக்க வேண்டியது இருந்தது. இந்நிலையில் மேற்கு ஜெர்மனியில் பிரான்சின் எல்லைகளில் உள்ள Pirmasens நகருக்கு அருகிலுள்ள Schwarzbachtalbrücke எனும் 100 மீட்டர் உயரமான பாலத்தில் தரை இறங்கினார். அப்போது அவரது விமானத்தின் மீது பாலத்தின் எதிரே வந்த டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும் டிரக் டிரைவர் காயமின்றி தப்பினார் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெரும்பாலான அவசர சேவை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தின் காரணமாக கொட்டிக்கிடந்த எரிபொருளையும், விமானத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி சரிசெய்ய முழு சாலையையும் முழுமையாக அடைக்க வேண்டியிருந்தது. அதன்பின் மாலைக்குள் பாதைகள் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இவ்வாறு நடந்த விபத்தில் சுமார் 60,000 யூரோகள் மதிப்புடைய பொருட்சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |