Categories
உலக செய்திகள்

அவசர நிலைக்கட்டுப்பாடு…. ஒப்புதல் அளித்த இலங்கை நாடாளுமன்றம்…. கண்டனம் தெரிவிக்கும் எதிர்கட்சியினர்….!!

உணவு பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்காக அவசரநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த சில நாட்களாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதற்காக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசரநிலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகளுக்கு 132 பேர் ஆதரவும்  51 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்டால் அது இலங்கையில் ராணுவ ஆட்சி உருவாக வழிவகுக்கும்  என தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் இந்த கட்டுப்பாடுகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவசரநிலை கட்டுப்பாடுகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதை தவிப்பதற்காக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை அத்யாவசிய சேவைகளின் ஆணையராக இலங்கை அரசு நியமித்துள்ளது. குறிப்பாக வியாபாரிகள் மற்றும் வணிகர்களிடம் இருக்கும் உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றின் விலையை கட்டுப்படுத்தவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |