அமெரிக்காவில் பயன்படுத்தபடும் பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றளவும் அதனுடைய தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 16 கோடியை தாண்டி உள்ளது. இந்த கொரோனா வைரசை ஒழிப்பதற்கு உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
தற்போது கொரோனா வைரசை ஒழிப்பதற்கு உலக நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ன . அதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா மற்றும் இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல தடுப்பூசிகள் தற்போது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதேபோல் வியட்நாம் நாட்டிலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக், இங்கிலாந்தின் ஆஸ்ட்ரா ஜெனகா மற்றும் சீனாவின் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ள வியட்நாம் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.