Categories
மாநில செய்திகள்

“அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு வந்து விட்டார்”….. அண்ணாமலையை சீண்டிய சீமான்….!!!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு வந்து விட்டார். இரண்டு வருடத்தில் பாஜகவினர் அண்ணாமலை விரட்டி விடுவார்கள் அண்ணாமலையிடம் தயவு செய்து கேட்கிறேன்.‌எச்.ராஜாவுக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கி கொடுத்து விடுங்கள். மேலும் காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்கி எச்.ராஜாவுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்‌ என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |