பிரான்சில் பள்ளி குழந்தைகள் விரும்பிக் குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகளால் எழுதப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டில் பள்ளி குழந்தைகள் அதிகமாக விரும்பி குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குளிர்பான பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள அவதூறு வார்த்தைகளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி குழந்தைகள் குடிக்கும் அந்த குளிர்பான பாட்டிலில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் அவதூறு வார்த்தைகளால் அச்சிடப்பட்டுள்ளது. ஆகையினால் காவல்துறை அதிகாரிகள் இந்த குளிர்பானத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார்கள்.
இதற்கிடையே இந்த குளிர்பான பாட்டில்களை சில சூப்பர் மார்க்கெட்டுகள் விற்கப் போவதில்லை என்று இதனை வாங்குவதற்கு மறுத்துள்ளார்கள்.