கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் செல்லும் உல்லாசமான சுற்றுலா பயணங்களால் ஆனந்தம் பெருகும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகப் பிரச்சினைகள் அனைத்தும் குறையும். தொடங்கிய வேலை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியான சூழ்நிலையை கொடுக்கும். கவலைப்படாதீர்கள். எல்லாம் மாலை நேரத்திற்குள் சரியாகிவிடும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அது மட்டும் உங்களுக்கு சிரமத்தை கொடுக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலை இன்று உண்டாகும். அரசாங்கப் பணிகள் அனைத்துமே தொய்வு இல்லாமல் நடைபெறும். ஓரளவு இன்று நீங்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். காரியங்களைச் செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் திட்டமிட்டு செய்யுங்கள். முன் கோபத்தை தவிர்த்து விடுங்கள். அக்கம்பக்கத்தினரிடம் பேசும்போது அன்பாக பேசுங்கள். இன்று நீங்கள் கோபத்தை மட்டும் தவிர்த்துவிட்டால் அனைத்தும் நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மாணவர்கள் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. கல்வியின் சிறப்பை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சக மாணவரிடம் கொஞ்சம் பழகும் பொழுது கவனமாக பழகுங்கள். அவர்களிடம் கொஞ்சம் நீங்கள் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். செல்வ போக வாழ்க்கை உங்களுக்கு அமையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்