Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…அலைச்சல்கள் அதிகரிக்கும்…வாக்குறுதிகளை தவிர்க்கவும்…!

மகர ராசி அன்பர்களே…!  இன்று பெண்களால் பெட்டி செலவுகள் ஏற்பட்டு அதன் காரணமாக சேமிப்பு கரையும். திடீர் மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அழைய நேரிடும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அடிக்கடி கனவுகள் வர கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகவே செய்யபட வேண்டும். எதையும் தீர ஆலோசித்து பின்னர் செய்வது ரொம்ப நல்லது.

புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். எதிலும் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். உறவினர்களால் சிறு தொல்லைகள் ஏற்படும் கவனமாக இருங்கள். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வாக்குவாதங்களை மட்டும் தவிர்க்கவும். யாருக்கும் இன்று நீங்கள் வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம்.

பஞ்சாயத்துக்கள் ஏதும் கலந்து கொள்ள வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பண விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொண்டால் போதுமானதாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |