கொரோனா தொற்றின் 2-வது அலை அடுத்து 3-வது அலை தவிர்க்க முடியாது என விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகின்றது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டி உள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிக அளவில் நிலவுகின்றது. இதனால் சில சமயம் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.இதன்பின் மே 15-ஆம் தேதிக்கு பின்பு கொரோனாவின் வேகம் குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் 3-வது அலையை தவிர்க்க முடியாது என்று விஞ்ஞானம் சார்ந்த ஆலோசகர் விஜயராகவன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜயராகவன் அவர்கள், “3-ம் கட்ட அறை முற்றிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக் கிடக்கின்றது. ஆனால் எந்த நேரத்தில் உச்சம் அடையும் என்று கணிக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே நாம் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. படுக்கை வசதி அதிகரிப்பு, தடுப்பூசி மேம்படுத்தல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இன்றி இருப்பு வைத்தல் போன்ற தற்போதைய கண்காணிப்பு தேவை” என்று அறிவுறுத்தியுள்ளார்.