Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி.. ஜஸ்ட்டு மிஸ்!”… இல்லன்னா என்ன ஆயிருக்கும்….? தவிர்க்கப்பட்ட பயங்கர விமான விபத்து….!!!

துபாயில் இருக்கும் சர்வேத விமானநிலையத்தில் இந்தியாவிற்கு செல்லவிருந்த இரண்டு  விமானங்களும் ஒரே ஓடு பாதையில் மோதிக்கொள்வது போன்று சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

துபாயின் சர்வதேச விமானநிலையத்திலிருந்து இரவு நேரத்தில் இரு விமானங்கள் ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு செல்ல தயாராக இருந்தது. அந்த சமயத்தில் 5 நிமிடங்கள் இடைவெளியில் செல்லவிருந்த விமானங்கள் இரண்டிற்கும் ஒரே ஓடுபாதையை ஒதுக்கினர். விமானங்கள் புறப்பட இருந்த சிறிது நேரத்திற்கு முன்பு தான், ஒரே ஓடுபாதையில் 2 விமானங்களும் புறப்பட இருந்ததை விமானநிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பிறகு, உடனடியாக ஹைத்ராபாத் விமானத்தை நிறுத்த விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்பிறகு, பெங்களூரு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் முதலில் சென்றது. தகுந்த நேரத்தில் தவறு கண்டறியப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது பற்றிய அறிக்கை நகலை தருமாறு, துபாய் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இந்திய விமான கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியிருக்கிறது.

Categories

Tech |