Categories
அரசியல் மாநில செய்திகள்

அட!…. உண்மையான அதிமுக எடப்பாடிதானா….? அப்ப ஓபிஎஸ்-க்கு அதிகாரம் கிடையாதா….? டெல்லி கடிதத்தால் திடீர் சலசலப்பு….!!!!!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவில் மோதல் போக்கு தொடங்கிய நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அதிமுகவில் வெளிப்படையாகவே மோதல் போக்கு தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக ‌ தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொருத்து தான் அதிமுக கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பது தெரியவரும்.

இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய பாஜக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எடப்பாடிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அதிமுக கட்சியின் பொறுப்பு அவரிடம் மட்டுமே இருப்பதாக அர்த்தமாகிறது. அதோடு ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் உண்மையான அதிமுக ஓபிஎஸ் கிடையாதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தற்போது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் டெல்லிக்கு இன்று சென்றுள்ளனர்.

Categories

Tech |