தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
இதனையடுத்து இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகின்றனர் என இணையத்தில் தகவல் பரவியது. ஆனால் இவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இருந்தபோதிலும், இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக சுற்றுலா செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கொண்டுதான் உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் இருக்கும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/CXrJIgQFLL2/?utm_source=ig_embed&ig_rid=cd7a3ed9-75a0-43e8-abf6-ee0706a3a3ed