தேவையான பொருட்கள்:
சிக்கன் அரை கிலோ,
லெமன் சாறு 2 ஸ்பூன்,
குடை மிளகாய் 2,
மிளகுத் தூள் 3 ஸ்பூன்,
எண்ணெய் ,உப்பு தேவையான அளவு.
செய்முறை:
சிக்கன் துண்டுகள் , எலுமிச்சை சாறு , தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கன் மேல் தடவி இரண்டு நிமிடம் ஊற வைக்கவும்.அதனை தொடர்ந்து குடை மிளகாய் விதையை நீக்கிவிட்டு நறுக்கிக் கொள்ளவும் .ஒரு கடாயில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடுயேற்றிய பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொன்னிறமாக வந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.இதன் பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு லேசாக வறுக்கவும் , அதனுடன் மிளகுத்தூள் , உப்பு , சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கி விட்டால் லெமன் சிக்கன் ரெடி அதை எடுத்து சுடச்சுட பரிமாறவும்.