Categories
இந்திய சினிமா சினிமா

அட! இது என்னப்பா புது டுவிஸ்டா‌ இருக்கு…. “வேள்பாரி” நாவலில் பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா….? பிளானை மாற்றிய‌ சங்கர்….!!!!!!

சங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் மகனா இது? கையில் பிளாக் பேன்டு.. கழுத்தில் சில்வர் செயின்  என இளம் வயசு சிம்பு போலவே இருக்காரே | director shankar son look like young  age simbu ...

தற்போது தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்கும் நடைமுறை இருந்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது வெங்கடேசனின் ”வேள்பாரி” நாவலை படமாக்க பலர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்கர் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

shankar_ranveer

மேலும், 3 பாகங்களாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகவும் அப்டேட் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் ‘வேள்பாரி’ என்ற ஹேஸ்டேக்  வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |