Categories
அரசியல் மாநில செய்திகள்

மா.செ.க்களுக்கு ஜாக்பாட் பரிசு காத்திருக்கு?…. எடப்பாடியின் புதிய உத்தரவால் செம குஷி‌யில் அதிமுகவினர்….!!!!!

அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் அனைவரும் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் வெற்றி பெற எஞ்சிய 38 தொகுதிகளிலும் திமுக வென்றது. ஆனால் அந்த ஒரு இடம் கூட தற்போது இபிஎஸ் வசம் கிடையாது. ஏனெனில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவைத் தொகுதியில் எம்.பி ஆக இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதன் பிறகு கூட்டத்தில் ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது என்று நிர்வாகிகளை கண்டித்த எடப்பாடி, பாஜக உடனான கூட்டணி பற்றி தலைமை முடிவெடுக்கும். அது பற்றி யாரும் பேசக்கூடாது என்றும் கூறினார்.

அதன் பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான பணிகளை எடப்பாடி பழனிச்சாமி தற்போதைய முடுக்கி விட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவினரை முழுமையாக வெற்றி பெற்றதால்,  தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்ட நிலுவையில் இருக்கிறது.

கூட்டுறவு சங்க தேர்தல் என்பது அதிகாரம் மிக்க தேர்தல் என்பதால் அதில் கிடைக்கும் வெற்றி மாநில அளவிலான தேர்தல்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். மேலும் அடுத்து வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு எதிர்பாராத அளவுக்கு பரிசு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |