Categories
மாநில செய்திகள்

“விழித்து விட்ட தமிழனை வீழ்த்திட முடியாது”…. திராவிடா விழி!… எழு!… நட!….. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ட்வீட்….!!!!!!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் நீதி கட்சியானது கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதன் 107-வது ஆண்டு விழா இன்று தொடங்குகிறது. நீதி கட்சியானது அனைவருக்கும் சம உரிமை மற்றும் சம நீதி எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு நன்மைகளை செய்துள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீதி கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பை
வார்த்தைகளால் சொன்னால் மிகையாகாது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நீதி கட்சியின் 107-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய twitter பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள்.

ஜாதியின் பெயரால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இட ஒதுக்கீடு என நம் நெடும் பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதி ஏற்போம். தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில் சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி இனமானம் காத்து அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை வரலாறு காட்டும் வெளிச்சம். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்தி விட முடியாது. திராவிடா விழி, எழு, நட என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1594168317644009472?s=20&t=CLov1NoGMb-wW-Br9YGrqA ‌

Categories

Tech |