Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது….. நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்குவதற்கு தமிழக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சியில்  நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ரஜினி கர்நாடக முதல் மந்திரிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதனையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி0யில் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரும் இடம் பெறுவார்கள் என்று கூறப் பட்டுள்ளது. மேலும் கர்நாடக ரத்னா விருதை வாங்கும் 10-வது நடிகர் மறைந்த புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |