Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு விருதுகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பிக்கிறது.

தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 114 அரசு பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்த விருதுகள் பள்ளியின் உள் கட்டமைப்பு, கணினி வழி கல்வி, ஆசிரியரின் கற்பித்தல் திறன் போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பள்ளிகளுக்கு விருதினை வழங்கி சிறப்பிக்கிறார்.

Categories

Tech |