முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப் பதாவது, தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தலைசிறந்த கல்வியாளருமான க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்பிறகு க. அன்பரசனின் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்காக 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி பள்ளிகளில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் முதற்கட்ட துவக்கமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஆணையரக வளாகத்தில் க. அன்பரசனின் மிகப்பெரிய திருவுருவ சிலையானது நிறுவப்படும்.
சிறந்த பள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சர் க. அன்பரசனின் பெயரில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி அன்பரசனின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஸ்டானின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த பிறந்தநாள் நூற்றாண்டு விழாவானது தற்போது முடிவடையும் நிலையில், பள்ளி கல்வி துறை ஆணையரக வளாகத்திற்கு க. அன்பரசனின் பெயர் சூடப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.