Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆண்டு விழாவில் விழிப்புணர்வு……. தனியார் பள்ளி புதிய முயற்சி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளியில் 34 வது ஆண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றின் 34 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவிகளின் ஆடல், பாடல் சுற்றுப்புற சூழல் குறித்த விளக்க நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதில் இந்திய நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உணர்த்தும் நடனங்களும், மழைநீர் சேகரிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட நல்ல கருத்துக்களை மட்டுமே நடனங்கள் நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றது வரவேற்கத்தக்க முறையில் அமைந்துள்ளது. மேலும் இந்த புதிய முயற்சியானது பொதுமக்களிடையேயும் பாராட்டை பெற்றுள்ளது.

Categories

Tech |