Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடல் நலத்தை காப்பதே நோக்கம்… விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேனர்கள்… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர்களை நகரம் முழுவதும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த பேனர்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சைக்காக தொடர்பு கொள்ள வேண்டிய எண், கொரோனா தொற்று அறிகுறிகள், தனிமைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பேனர்களில் நம்பகத்தன்மை இல்லாத தகவல்கள் சமூக ஊடகங்களில் வந்தால் அதனை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் எனவும், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவராக இருந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மக்களை தனிமைப்படுத்துவது தங்களின் நோக்கம் இல்லை எனவும், உடல் நலத்தை காப்பது தான் முதன்மையான நோக்கம் எனவும் அந்த பேனர்களில் எழுதப்பட்டிருந்தது.

Categories

Tech |