வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாகனங்களில் சிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள், அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், போன்ற பொது மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி சார்பில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த ஸ்டிக்கரில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன், மகளிர் திட்ட இணை இயக்குனர் ஈஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.