Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதில் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கு… கவனமா இருக்கணும்… நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…!!

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரினால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஆக்சிஜன் சிலிண்டரால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் தர்ஷினி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் சரியாக மூடப்பட்டுள்ளதா எனவும், சிறிது கசிவு ஏற்பட்டாலும் வெப்பநிலை காரணமாக தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தீ விபத்து ஏற்படும் சமயத்தில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், சிலிண்டர்களை பராமரிப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார். இந்த முகாமில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேம் ஆனந்த், மருத்துவ அலுவலர் ரவி சங்கர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |