சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100% வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன இயக்குனர் தலைமை தாங்கியுள்ளார்.
அப்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஜனாப் ரோசலின் என்பவர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களின் வளர்ச்சி, பெண்களின் உரிமைகள், 100 சதவீதம் வாக்குப்பதிவு போன்றவை குறித்து விளக்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது பாப்பம்மாள் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.