Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க கவனமா இருக்கணும்… வடமாநில தொழிலாளர்களின் வருகை… அதிகாரிகளின் விழிப்புணர்வு…!!

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் பனியன் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினர்.

இதனையடுத்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தங்களது ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு வர தொடங்கியுள்ளனர். மேலும் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |