உலக மக்கள் தொகை தினத்தை அரசு மருத்துவமனையில் வைத்து குத்துவிளக்கேற்றி கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைத்திருக்கும் அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 6, 05, 620 ஆண்கள் மற்றும் 5, 96, 168 பெண்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து இந்த வருடம் கொரோனா பரவல் குறித்து எளிமையாக நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்பின் இம்மாவட்ட அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.
இதில் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஆகியோர் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். பின்னர் இந்த தினம் காரணத்தால் இம்மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பொதுமக்களுக்கு குடும்ப நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை எடுத்து கூறியுள்ளார். மேலும் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.