‘தளபதி65’ பட நடிகை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
இதைத்தொடர்ந்து கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. மேலும் பல திரை பிரபலங்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.