சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜானி மாஸ்டர் ஒரு பதிவை தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடன இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ஜானி மாஸ்டர். இவர், தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில், வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘செல்லமா’ பாடலுக்கு இவர்தான் நடன இயக்குனர்.
மேலும், விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்திற்கும் ஜானி மாஸ்டர் தான் நடன இயக்குனர். இதனையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’ இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் புதிய பாடலுக்கு நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணிபுரிய உள்ளார். இந்நிலையில், சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”முதல் முறையாக அவருடன் பணியாற்றுவது வியப்பாக இருக்கிறது எனவும், அவர் பணிபுரிவதற்கு மிகவும் பணிவான மனிதர்” எனவும் ஜானிமாஸ்டர் பதிவிட்டுள்ளார்.
.@Suriya_offl Sir is such a humble & down-to-earth person to work with ❤
Excited to work with him for the first time 🤩 Get ready to witness his energy in our song from #EtharkkumThunindhavan 😎@pandiraj_dir @immancomposer @RathnaveluDop @priyankaamohan @sunpictures pic.twitter.com/1YNkHG7RKn
— Jani Master (@AlwaysJani) October 22, 2021